TTD SAPTHAGIRI 2022 March TAMIL MAGAZINE DOWNLOAD | TTD eBooks Download
Language: Tamil
Year: 2022
பெண்மையைப் போற்றிடுவோம்
பெண்மை எங்கு போற்றப்படுகின்றதோ, பாராட்டப்படுகின்றதோ அங்கு உள்ள சமுதாயமும் மேன்மை அடைகின்றது. என்று, எங்கு பெண்மைக்கு இழுக்கு நேருகின் றதோ, அதற்குக் காரணமான சமுதாயமும் நரகத்திற்குச் செல்கின்றது. இது இம்மண் காட்டியுள்ள உண்மை சம்பவங்களாகும். இம்மண்ணில் விளைந்த சரித்திரமும் இதுவேயாகும்.
தாய் என்றும், சகோதரி என்றும், மனைவி என்றும் பெண்ணானவள் ஒரு ஆணுடைய வாழ்க்கையில் இடம் பெறுகின்றாள். இவ்வாறு பல நிலைகளில் திகழ்ந்திடும் பெண்ணின் சிறப்பினைக் கொண்டே மண்ணையும், விண்ணையும், நாட்டையும், நீரினையும், மொழியையும் பெண்ணாகப் போற்றிம் உள்ளனர். ஓர் ஆணின் சரிவு என்பது அக்குடும்பத்தை மட்டுமே சாய்த்திடும். ஆனால், ஒரு பெண்ணின் சரிவு என்பது ஒரு சமுதாயத்தையே சீரழித்து| விடும். அன்பினால் திருத்திய மங்கயைர்கரசியும், ஆடலால் திருத்திய குமுதவல்லியும், அழகால் திருத்திய ரத்னாவும், கடமையால் திருத்திய அரசமாதேவியும், பாசத்தால் திருத்திய திலகவதியாரும் இச்சமுதாயத்தை மேம்படுத்திட்ட மங்கையர்களுக்கு ஒரு முன்னுதாரணங்களாவர்.